திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி அமைப்பு சாரா ஒட்டுநர் அணியை உருவாக்கி அதற்கு தலைவராக கதிர் ஆனந்தும், விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கி அதற்கு செயலாளராக தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டி கே எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், சுப தங்கவேலன், எஸ் எஸ் பழனி மாணிக்கம் இதோடு பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் துரைமுருகன்.
Categories