தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடினார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் காதல் ஜோடி அஜித் மற்றும் ஷாலினியின் மற்றொரு புகைப்படமானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.