நடிகை மும்தாஜ் டி.ஆர். ராஜேந்திரர் இயக்கத்தில் வெளிவந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின் குஷி, சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடயிருப்பில் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மும்தாஜ் 23 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் பார்த்திபனிடம் 15,000 கடன் வாங்கியுள்ளார். இதை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து கொடுத்ததுடன், அந்த நேரத்தில் தனக்கு உதவியதற்கு நன்றி என கூறி சென்றுள்ளார். இதை பார்த்திபன் ட்விட்டரில் குறிப்பிட்டு, நானே இதை மறந்துவிட்டேன், ஆனால் அவர் அதை நினைவில் வைத்து கொடுத்துள்ளார். அவரின் நன்றி குணத்தை என்ன சொல்வது என்று நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.