சிரியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அந்நாட்டு அதிபர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல்-அசாத் (Asma al-Assad) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், சண்டையில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்குச் சென்ற அஸ்மா அல் அசாத், அங்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட பிரிவுக்கு சென்று அங்கிருந்த சிறார்களைச் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறினார். அதேபோல குழந்தைகளின் பெற்றோருக்கும் தனது ஆறுதலை அவர் தெரிவித்தார்.