Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த ரயில்வே நடைமேம்பாலம்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 நடைமேடைகளை இணைக்ககூடிய நடை மேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அது ரயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கிறது.

இதனால் நடை மேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்திய ரயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூபாய்.1 லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது.

இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனே நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த விபத்து சம்பவம் பற்றி மத்திய ரயில்வே நிர்வாகம் சார்பாக விசாரணை துவங்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |