இந்தோனேசியாவில் தரமில்லாத போலி முககவசங்கள் தயாரித்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. 95 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு முகக்கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் பொது வெளியில் செல்லும்போது நோய் தாக்காமல் இருக்க ஒவொருவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் செல்கின்றனர். தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் முன்பை விட அதிகமாக தேவைப்படுகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் முக கவசங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். அதேநேரத்தில் தரமில்லாத போலி முககவசங்களை தயாரித்தும் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களையெல்லாம் கண்டறிந்து போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்று இந்தோனேசியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்நாட்டின் பாலி, ஜகார்த்தா உள்ளிட்ட இடங்களில் முககவசங்கள் மற்றும் போலி முககவசங்கள் தயாரிப்பு குறித்து போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். மருந்தகங்கள், குடோன்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த போலீசார், போலி முககவசங்களையும், தயாரித்தவர்களையும் கைது செய்தனர்.