பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட பலன்களை பெற விரும்பினால் உங்களுக்காக சில வலுவான Vi திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவை என்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். நாம் பேசும் Viன் திட்டத்தின் விலையானது ரூ.401 ஆகும். இது நிறுவனத்தின் மலிவான போஸ்ட் பெய்ட் திட்டமாகும். எனினும் இதில் பல நன்மைகள் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இத்திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக பேசும்போது, நீங்கள் இதில் 50gp டேட்டாவைப் பெறுவீர்கள். அதேபோன்று இதில் நீங்கள் 200gp மாதாந்திர டேட்டா ரோல் ஓவர் பெறுவீர்கள். மேலும் இத்திட்டத்தில் மாதந்தோறும் 3000 smsம் நீங்கள் பெறுவீர்கள். இத்திட்டத்தில் உங்களுக்கு மதியம் 12:00 மணி முதல் காலை 6:00 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.
நீங்கள் விரும்பும் அளவுக்கு இணையத்தினைப் பயன்படுத்தி படம் பார்க்கலாம். இதில் சிறப்பு என்னவெனில், இந்த இன்டர்நெட்டின் வேகம் முற்றிலும் இலவசம் மற்றும் அன்லிமிடெட் ஆகும். அத்துடன் இந்த திட்டத்தில் உங்களுக்கு OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் இதில் நீங்கள் SonyLIV மொபைல் சந்தா, Vi Movies, TV ஆப்ஸ், Hungama Music App, Vi Games மற்றும் Night Binge போன்றவற்றின் சந்தாவைப் பெறுவீர்கள். அதேபோன்று இத்திட்டத்தில் நீங்கள் நாட்டில் எங்கும் இலவச அன்லிமிடெட் காலிங் நன்மையையும் பெறுவீர்கள் என்பது கவனிக்கத்தக்கது.