Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடிவு…? வெளியான முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்த திட்டமா? என மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர், ஊரக வேலை திட்டம் பற்றி ஆய்வு செய்ய அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சொத்துகள் சேர்த்த தமிழகம் போன்ற மாநிலங்களில் இத்திட்டம் தேவையில்லை என முடிவு செய்ததாக தெரிகிறது. அப்படி ரத்து செய்யப்பட்டால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று கூறியுள்ளர்.

Categories

Tech |