Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்…! படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை…?!!

ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலாக கன்னட சினிமாவில் தான் திரைப் பயணத்தை தொடங்கினார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் திரைப்படம் குறித்து பேசிய போது அத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ குறித்து பேசவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் கர்நாடக ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளார்கள். தன்னை வளர்த்து விட்ட திரையுலகை மறந்துவிட்டு தமிழ், தெலுங்கு போன்ற திரையுரையில் கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் கன்னட திரை உலகில் அவர் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |