சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் ஸ்ரீலங்கா அணி வெற்றி பெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , இந்தியா லெஜெண்ட் ஆடிய முதல் போட்டியில் இந்தியா லெஜெண்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணியும் , தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா லெஜெண்ட் முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் அடித்தது. அதிகபட்சமாக கழுவித்தரனா 30 ரன் எடுத்தார். ஆஸி அணி சார்பில் மெக்கே , டோஹெர்ட்டி , லாஹ்லின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய லெஜெண்ட் அணியில் ரியர்டன் 53 பந்துகளில் 96 ரன் எடுத்து ருத்ரதாண்டவம் ஆண்டினார். 9 பவுண்டரி , 5 சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஆனாலும் ஏனைய வீரார்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணி வெற்றி பெற்றது. ஆஸி. அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் மட்டும் அடித்ததன் மூலம் ஸ்ரீலங்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்திய தில்ஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.