Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். பகை ஏற்பட கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் வீட்டு செலவில் சிக்கனத்தை பின்பற்றவும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிக்க கூடும். அரசு வகையில் நல்ல உதவிகள் கிடைக்கும்.இன்று ரகசியங்களை யாரிடமும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதனால் காரியத் தடைகளும் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் அதன் காரணமாக பிறரிடத்தில் பகையும் ஏற்படலாம்.

மனோதைரியம் இன்று கூடும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். செலவை மட்டும் எப்பொழுதுமே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நிதானத்தை மேற்கொள்ளுங்கள், கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இருந்தாலும் சில பிரச்சினைகள் ஏற்படும் பொழுது பேசித் தீர்த்துக் கொள்ளுவது  ரொம்ப நல்லது. மாணவச் செல்வங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கூடுமானவரை தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். உங்களுடைய மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அமைதியாக வைத்துக் கொண்டாலே கல்வியில் நீங்கள் எளிதாக வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு திட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |