Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..சிந்தனை திறன் கூடும்…முக்கிய ஆலோசனை மேற்கொள்வீர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சு செயலில் உங்களுடைய நேர்மை நிறைந்திருக்கும். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உறவினர் வீட்டு விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இதனால் செலவும் உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது கொஞ்சம் குறையலாம். சரக்குகளை விற்பதில் வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வீர்கள்.

உங்களுடைய சிந்தனை திறன் இன்று கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும், காதலர்களுக்கு இன்று உன்னதமான நாளாகவே  அமையும்.இன்று  பாடத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. விளையாட்டைஓரங்கட்டி விடுங்கள். தெளிவான முடிவை எடுங்கள், அதேபோல தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |