சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார்.
மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்தினர். தற்போது சமந்தாவிற்கு வீட்டில் உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. .ஆயுர்வேத சிகிச்சையால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகின்றது.