Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பு.. பொறுப்புகளில் கவனம் இருக்கட்டும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். சராசரி பணவரவு டன் நிலுவைப்பணம் வசூலாகும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும், நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள், மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ரகசியங்களை இன்று பாதுகாப்பது ரொம்ப நல்லது.

யாரிடமும் உங்களுடைய சொந்த விஷயங்களைப் பற்றி பேசிக் கொள்ளாதீர்கள், இன்று எதிரும் புதிருமான செயல்கள் ஓரளவு மன திருப்தியை கொடுக்கும் வகையில் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைத்துதான் போராட வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும். தேர்வு முடியும் வரை உங்களுடை மன நிலையை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லை உணவுப் பழக்க வழக்கங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |