Categories
Tech

வாட்ஸ் அப்பில் அசத்தலான அப்டேட்…. விரைவில் அறிமுகமாகும் Contact Card அம்சம்…. சிறப்பம்சங்கள் என்னென்ன….????

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதே சமயம் தினம்தோறும் புதிய அப்டேட்டுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சமீபத்தில் கம்யூனிட்டிஸ் என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக வாட்ஸப் குழுக்களுடனான உரையாடல் தற்போது எளிதாகிவிட்டது. இதில் எண்டு எண்டு என்கிரிப்ஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் பயனர்கள் மத்தியில் இந்த வசதி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ்கள் ஸ்டேட்டஸ் வசதி விரைவில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது polls உருவாக்கும் அம்சம் வந்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் காண்டாக்ட் கார்டு அம்சம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக ஒரு சார்ட்டில் காண்டாக்ட் கார்டுகளை எளிதில் பகிர முடியும். இந்த அம்சம் தற்போது பீட்டா பயணங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் இதனை பெறுவது மிகவும் எளிது தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தவுடன் என்ட்ரி பாயிண்டில் காண்டாக்ட்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். கால் டாக்ஸ் என்ற விருப்பத்தை கிளிக் செய்தவுடன் ஷேர் காண்டாக்ட் என்ற விண்டோ தோன்றும் அதனை பயன்படுத்தி நீங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |