தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 மாதம் உதவி தொகை போன்றவற்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை அடிப்படையில் 2.20 கோடி கார்டுகாரர்களை ஆய்வு செய்ததில் 14.60 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தில் இணை பதிவாளர்டன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிறப்பித்தார். மேலும் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்கு மாதம் திட்டமிட்டுள்ளதால், இந்த தொகையை வங்கியில் செலுத்துவதற்கு முன்னோட்டமாக ஜனவரி மாதம் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.