Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில்,  குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 திட்டத்தை பொங்கலுக்கு செயல்படுத்த அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இல்லாததை அரசு கண்டறிந்துள்ளது. இதனால், அக்கவுண்ட் இல்லாத கார்டுதார்களுக்கு 1 வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கும் பணியை முடிக்குமாறு மண்டல ணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |