மேஷம் ராசி அன்பர்களே..! இன்று திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். ஆதாயம் சேமிப்பாக இன்று மாறும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களில் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நடக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். மாணவக் கண்மணிகள் தேர்வுக்காக கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்