ஆசிய பசுபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்கள், நில நடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற லைவ் செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வோடு வெளியிட வேண்டும். அதன் பிறகு தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை வெளியிடும்போது அது தொடர்பான தடையங்களை அழித்து விடவோ, தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது.
இந்த செய்திகள் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் விதமாக தடையங்களை அழிக்கும் விதமாக அமைந்து விடக்கூடாது என்பதை ஊடகங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது கொரோனா காலகட்டத்தினால் ஊரடங்கு போன்ற பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளை நாம் சந்தித்து வருவதால் மக்களுக்கும் வெளி உலக தொடர்பை தெரியப்படுத்தும் முக்கிய பணியை ஊடகங்கள் செய்கிறது. எனவே இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சரியான மற்றும் தக்க தருணத்தில் செய்திகளை வெளியிடுவது ஊடகங்களின் கடமை என்று கூறினார். மேலும் ஊடகங்கள் அனைத்தும் பொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.