Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் குறிப்பிடப்படும். அதன்படி, ரிசர்வ் வங்கி அறிவிப்பின் மூலம் ரூபாய் 1, ரூபாய் 2, ரூபாய் 5, ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50, ரூபாய் 100, ரூபாய் 500, ரூபாய் 2000க்கு டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வர உள்ளன.

 

Categories

Tech |