தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக 2 வருடங்கள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க மற்றும் பயிற்சி எடுப்பதற்காக [email protected] என்ற இணையதளத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் மாநில,தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு சிறப்பு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.