Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்…. வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்கள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை உடன்படிக்கும் 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரத்திற்கு இறையாக்கி செல்போனில் பதிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதை யாரிடம் ஆவது கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் துறையை அணுகியதன் மூலம் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் செல்போன்களில் பாலியல் வன்கொடுமையை பதிவு செய்து இதை யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவோம் என சிறுமியை மிரட்டியதும் பத்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சிறுமியை பிளாக்மெயில் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து சிறார் மாணவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |