பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறினார்.
இந்த நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள காயத்ரி ரகுராம், ‘உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களை சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார். ஒரு நாள் உண்மை வெளிவரும், அப்படித்தான் தண்டிக்கப்படுவீர்கள்’ என்று கூறியுள்ளார்.