கொரோனா வைரஸ் சம்பந்தமாக எல்லா மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அனைத்து மாவட்ட சுகாதாரத்துரை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி பல்வேறு உத்தரவுகளையும் , அறிவுறுத்தலையும் பிறப்பித்தனர்.
அதில் மாவட்ட வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எந்த அளவில் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு எப்படியான அறிவுரைகள் வழங்கப்படுகின்றது. தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்ற விழிப்புணர்வை தொடர்ந்துமேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் , தும்மல் , சளி இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மருந்துகளை தானாக உட்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி வீடியோவை சுகாதாரத்துறை சார்பில் வெளியாக இருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு அரசுடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை வீடியோ கான்பரன்சில் பேசப்பட்டது. தனியார் ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் யார் ? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு அறிவுரையை சுகாதாரத் துறை அமைச்சரும் , செயலாளரும் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.