கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு என்ன எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இன்று தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் மீண்டும் கூட்டும் போது கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுமென்று தெரிகின்றது.
தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? போன்ற பல்வேறு விஷயங்களை பேரவையில் விவாதிக்க வேண்டுமென்று திமுக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை செய்து மேற்கொண்டு வருகின்றார். அதே போல முதல்வரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த நிலையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.