Categories
மாநில செய்திகள்

எங்களுக்கே பைன் போடுவீங்களா…. குப்பை கிடங்காக மாறிய காவல் நிலையம்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை  வழிமறித்த  போக்குவரத்து  போலீசார்   ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம்  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர்  தனது நண்பர்கள்  2  பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் குப்பைகளை நிரப்பி  போலீஸ் ஸ்டேஷன் அருகே குப்பையை  கொட்டியுள்ளார்.

இது குறித்து போலீசார் கந்தசாமியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் வண்டி பழுதாகி விட்டதால் குப்பைகளை இங்கு கொட்டி செல்வதாகவும், சிறிது நேரத்தில் திரும்பி வந்து எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கந்தசாமிக்கும் போக்குவரத்து போலீசாருக்கும்  இடையே ஏற்பட்ட தகராறு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த நகராட்சி ஆணையர் சுதாவிடம் காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவது. கந்தசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தவறு செய்திருந்தது தெரிந்தால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |