Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 நாள்…… பள்ளி… கல்லூரிகளுக்கு விடுமுறை……. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு……!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டுவிழா இன்றும், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா நாளையும்  நடைபெற உள்ளது. இந்த இரண்டு விழாக்களும் அம்மாவட்டத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடும்  இந்த விழாவை அம்மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். இந்த செய்தி மாணவ மாணவிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |