இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினால் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டு உள்ளது. மேலும் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால் சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.