தஞ்சாவூரில் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் 163 வது நாளை கடந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், மேலூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்காக விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி ஏழைகளுக்கு காலை உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த உணவு மிகவும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செப்டம்பர் மாதம் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது 163 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் என்ற ஹஸ்டக் மூலம் டுவிட்டரில் கண்டுபிடித்து காணலாம்.