அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்களை ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஐந்தாயிரம் ரூபாய் வரை வாங்கினால் இலவசமாக spotify பிரீமியம் வழங்கப்படும். இந்த சலுகை நவம்பர் 30ஆம் தேதி வரை வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு spotifyum சேவை வழங்கும் வவுச்சர் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.