தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.