Categories
மாநில செய்திகள்

BREAKING : கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழக முதல்-அமைச்சர்  பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் தற்போது  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த4 நாட்களுக்கு முன்புகூட தமிழக தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருந்தார். அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட வேண்டாம். போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன ? இனிமேலும் தேவையான நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து தமிழக முதல்-அமைச்சர்  பழனிசாமி  அதிகாரிகளுடன் தற்போது  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |