Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய 8 பேர்!

சென்னையில் தனியார் மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் லிப்ட் மூலமாக மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் லிப்டில் பயணம் செய்த சையது பாத்திமா(20), ஷபீதா(42) சையத்லாபுபாத்திமா (20) சாதுல்லா( 35) சபீலா (45) சையது மூர், சைபா சுல்தானா(26) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து சம்பந்தமாக தகவல் அளிக்கப்பட்டு ஐஸ் ஹவுஸ் காவல்நிலைய ஆய்வாளர்          திரு.கருணாகரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  அந்த விசாரணையில் லிஃப்ட் இயக்குவதற்கு ஊழியர் இல்லாததாலும், அளவுக்கு அதிகமான நபர்கள் லிஃப்டில் இருந்த காரணத்தினாலும்  எடை தாங்காமல் விபத்து ஏற்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |