Categories
தேசிய செய்திகள்

“மாணவனை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட ஆசிரியர்”…. ராவணன், சகுனின்னு சொல்ற மாதிரி தான் இதுவும்….. கர்நாடக மந்திரி அதிரடி பேட்டி…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் கல்லூரி மாணவர் ஒருவரை ஆசிரியர் பயங்கரவாதி கசாப் பெயரை வைத்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர் உரையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக எம்.பி மந்திரி பிசி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, ஆசிரியர் மாணவரை அந்த பெயரை வைத்து அழைத்து இருக்கக் கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்சனை இல்லை என்று நான் உணர்கிறேன். ஏனெனில் நாம் பலமுறை மாணவர்களை ராவணன், சகுனி என்றெல்லாம் அழைக்கும் போது அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறுவது கிடையாது. இதை ஒரு பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொண்டாலும் சில பெயர்கள் ஏன் தேசிய அளவில் பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பது எனக்கு தெரியவில்லை.

அதன் பிறகு அமைச்சர்களை கூட பொதுவாக ராவணன் மற்றும் சகுனி என்றெல்லாம் அழைக்கும் போது அது பெரிய பிரச்சனையாக மாறுவது கிடையாது. அது செய்தியாக மாறுவது இல்லை. ராவணன் என்ற பெயருக்கு ஏதேனும் நேர்மறை அர்த்தம் இருக்கிறதா?. நான் எதையும் ஒப்பிடவில்லை. இந்த சம்பவத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்காக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் ஆசிரியர்கள் அந்த வார்த்தையை பயன்படுத்திருக்க கூடாது. மாணவர்கள் மனம் புண்படாத படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |