மத்திய பிரதேசம் மாநிலத்தின் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் ஒருவன் மிகவும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சிறுவன் விசித்திரமான werewolf syndrome என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவன் இந்த நோயுடன் தான் தனது வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நோயால் மனித உடலில் அனைத்து பகுதிகளிலும் முடிகள் வளரும்.
இந்த அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் முடி வளரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். தற்போது 17 வயதாகும் இந்த சிறுவனுக்கு ஆறு வயதில் இந்த நோய் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த சிறுவனின் உடல் முழுவதும் முடி படர்ந்து உள்ளது. இதன் காரணமாக சிறுவன் சிறுவயதில் இருந்து அனைவரிடமும் ஒதுக்கப்பட்டு பல மன உளைச்சல்களை சந்தித்துள்ளான். அது மட்டுமல்லாமல் சிறுவனின் சக நண்பர்கள் அவனை குரங்கு பையன் என அழைத்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.