Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார்.

இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் ரயில்வே நிலையத்துக்கு அருகில், மெட்ரோ ரயில்வே நிலையம் அமைப்பதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு அங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |