பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிகளுக்கு துப்புகிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் நேற்று ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இது தொடர்பாக மேலும் பேசியதாவது “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிளுக்கு துப்புக்கிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அவா் கூறினாா்