கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவரான நடாவ் லாபிட் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இவையெல்லாம் எனக்கு புதிதல்ல.
Terror supporters and Genocide deniers can never silence me.
Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 29, 2022
இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே பயங்கரவாத அமைப்புகளாலும், நகர்ப்புற நச்சல்களாலும், இந்தியாவை பகுதி பகுதியாக பிரிக்கும் நோக்கம் கொண்ட ஆதரவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்து பேசிய நடாவ் லாபிட் போன்றோர் இந்த படத்தில் வரும் காட்சிகள் மற்றும் உரையாடல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை நிரூபிக்க நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். அவ்வாறு அவர்கள் நிரூபித்து விட்டால் நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன் என வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.