எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
2,138 நபர்கள் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பதாக கண்டறிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பின் கடந்த 10 வருடகால அ.தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்பாடுகள் மக்களுக்காக செய்து கொடுத்து இருக்கிறோம். அதனை தான் பட்டியலிட்டு பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயார். அதே நேரம் கடந்த 19 மாத கால ஆட்சியில் நீங்கள் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?, அதனால் மக்கள் அடைத்த பயன் என்ன?.. என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?.. என்று அழைப்பு விடுத்தார்.