Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற  பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து நடப்பாண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும், மராமத்து பணிகளுக்கும் கூடுதலாக 1,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருஉருவசிலை நிறுவபடுவது மட்டுமல்லாமல் அந்த வளாகம் “பேராசிரியர்  அன்பழகன் கல்வி வளாகம்” என அழைக்கப்படும். மேலும் பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |