Categories
தேசிய செய்திகள்

தொடர் ராகிங் கொடுமை….. எம்.காம் மாணவன் தற்கொலை முயற்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் 21 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் முதல் ராகிங் கொடுமையானது நடந்துள்ளது. மூத்த மாணவர்களின் தொடர் ராகிங் தொல்லையால் அது தொடர்பாக பல்கலைகழகத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது பல மூத்தமாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மறைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், ராகிங்கை மறைக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின் அதிகாரிகளின் பக்கம் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் அரசியல் அறிவியல் படிக்கும் சுப்ரோஜோதி பருவா என்ற மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் நீவார் என்ற மாணவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |