சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக பேசிய ரவுடி பேபி சூரியா யூடியூப், பேஸ்புக்கில் பதிவிடும் வீடியோக்கள் ஆபாசம், அருவருப்பாக இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு இந்த விசரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், ரவுடி பேபி வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, சூர்யாவின் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் சூர்யாவின் வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வழக்கு விசாரணையை 6 மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.