பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினரிடம், ஜென்மன் ஷெப்பேர்ட் நாய் ஒன்று உள்ளது. அவர்கள் திருமணத்திற்கு செல்வதற்காக நாயை வீட்டில் கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து நாயின் உரிமையாளரிடம் காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை இன்று கைது செய்தனர்.