இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று தெரிகிறது. கடந்த 8 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை $31 (27%) குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.14 – ரூ.15 குறைய வாய்ப்புள்ளது.
Categories