மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் 465 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது.
அதன் பிறகு கமலின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் 175 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது அந்த சாதனையை பொன்னியன் செல்வன் வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 665 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான டூ பாயிண்ட் ஜீரோ திரைப்படம் இந்தியாவில் 508 கோடியும், வெளிநாடுகளில் 665 கோடியும் வசூலித்திருந்தது. மேலும் 2.0 படத்திற்கு பிறகு உலக அளவில் அதிகம் வசூல் சாதனை புரிந்த இரண்டாவது திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது.