பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இருப்பினும் நடிகர் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவர் நடிப்பில் அண்மையில் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் என்ற புதிய தொடரில் நடிகர் கார்த்திக் ராஜ் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். இது தொடர்பான புரோமோ வீடியோவும் ரிலீசாகியுள்ளது. மேலும் நடிகர் கார்த்திக் ராஜின் புதிய சீரியல் அப்டேட்டால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.