அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது. ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது என்று கேலியாக கூறினான்.
இதனால் மசூத் அசாரை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக மசூத் அசாரின் சிறையை மாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பாரிஸில் நடந்த சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் மசூத் அசாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறி இருந்தது. ஆனால் தலிபான்களைப் பாராட்டி மசூத் அசார் வெளியிட்ட அறிக்கை இம்ரான் கான் அரசாங்கத்திற்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.