தமிழகத்தில் கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? உலக சுகாதார மையம் முக்கிய அறிவிப்பு!சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது புனேவில் இருந்து வெளிவந்த அறிக்கையின்படி சென்னை சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
இதனிடையே அதிக வெயிலால் கொரோனா பரவாது என்ற செய்தி வரவி வருகிறது. தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பமாகவுள்ளதால் இந்த வெயிலுக்கு கொரோனா பரவாது என தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவ வாய்ப்பில்லை என சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வெயில் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்கிற நம்பிக்கையை உலக சுகாதார மையம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுபோன்ற கருத்துக்களை நம்பி அலட்சியமாக செயல்பட்டு கொரோனா பரவுவதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார மையம் வேண்டுகொள் விடுத்துள்ளது.