நடிகை கௌதமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகையான கெளதமி ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளிக்கு பிறகு பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 1999இல் தனது கணவரை பிரிந்தார்.
இதன்பின் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2016 ஆம் வருடம் பிரிந்தார்கள். கௌதமிக்கும் சந்தீப் பாட்டியாவுக்கும் பிறந்தவர் சுபலட்சுமி. இவர் 2018 ஆம் வருடத்தில் பாலா திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை கௌதமி மறுத்தார். அவ்வப்போது சுபலட்சுமி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் கௌதமி பதிவிட்டுள்ளார்.