போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா சாலையில் அதிக வேகத்தை கண்காணிக்க சென்சார் டிஜிட்டல் போர்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.